செய்திகள்

1300 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும் தொடர்!

நினைத்தாலே இனிக்கும் தொடர் குறித்து வெளியான புதிய தகவல்.

DIN

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடர் 1300 நாள்களைக் கடந்துள்ளது.

2021 ஆகஸ்ட் முதல் 4 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிவரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில், ஸ்வாதி சர்மா, ஆனந்த் செல்வன் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஸ்வாதியின் அழுத்தமான நடிப்பு இத்தொடருக்கான கூடுதல் வலுவை சேர்த்து வருகிறது. இவர் இத்தொடரில் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

இனிப்பு வகைகளைச் சுட்டு விற்பனை செய்யும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண், இனிப்பு வகைகளைக் கொண்டு வணிகம் செய்யும் செல்வந்தர் வீட்டு மகனை திருமணம் செய்துகொள்கிறார். அங்கு அவர் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதை.

அடுத்தடுத்த திருப்பங்களைக் கொண்டு திகில் மற்றும் மர்மங்கள் நிறைந்த காட்சிகள் இத்தொடரில் அமைக்கப்பட்டுள்ளதால, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பெங்காளி மொழியில் 'மிதாய்' என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர், தமிழில் நினைத்தாலே இனிக்கும் என்ற பெயரில் மறு உருவாக்கம் (ரீ-மேக்) செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுகிறது.

பிரியன் இயக்கும் இத்தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

நினைத்தாலே இனிக்கும் தொடர் 1300 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் தொடர் குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: பாரதி கண்ணம்மா தொடர் இயக்குநரின் புதிய சீரியல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

SCROLL FOR NEXT