டாம் க்ரூஸ் 
செய்திகள்

ஆஸ்கர் விருது பெறும் டாம் க்ரூஸ்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்-க்கு கௌரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் தனது ஆக்‌ஷன் படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகர் டாம் க்ரூஸ். மிஷன்: இம்பாசிபிள் திரைப்படங்களில் வரும் அவரது மிகவும் அபாயகரமான ஸ்டண்டுகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இவருக்கு உண்டு.

இந்நிலையில், பல்வேறு சாதனைகளுக்கும் விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் க்ரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய அளப்பரிய பங்கிற்காக அவருக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

கவர்னர்ஸ் விருது என்றழைக்கப்படும் இந்த ஆஸ்கரானது வரும் நவம்பர் மாதம் 16 ஆம் தேதியன்று நடைபெறும் 16 - வது கவர்னர் விருது விழாவில் அவருக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், நடன இயக்குநரும், நடிகையுமான டெப்பி ஆலன், வடிவமைப்பாளர் வின் தாமஸ் ஆகியோருக்கும் கௌரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரூ.50 கோடியில் காசி நகரத்தை உருவாக்கும் ராஜமௌலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமரேயாானாலும் ராஜிநாமா செய்ய வேண்டும்: அரசியலமைப்புத் திருத்த மசோதா குறித்து அமித் ஷா விளக்கம்

பாதை தவறுகிறோம்...

யுஎஸ் ஃபெடரல் மீதான எதிா்பாா்ப்பு: பங்குச்சந்தையில் எழுச்சி!

கவலையளிக்கும் சாலை விபத்துகள்!

பகை சான்ற நாட்டில்கூட வாழலாம்!

SCROLL FOR NEXT