அஜித் குமார், யுவன் சங்கர் ராஜா 
செய்திகள்

அஜித் - யுவன் சந்திப்பு!

நடிகர் அஜித், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சந்திப்பு...

DIN

நடிகர் அஜித் குமாரும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சந்தித்துக்கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இனி வருடத்தில் ஆறு மாதம் நடிப்பிற்கும் ஆறு மாதம் கார் பந்தயத்திற்கும் செலவிட முடிவு செய்துள்ளார்.

தற்போது, அஜித்தின் அடுத்தபடத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அஜித்தும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நேரில் சந்தித்துக்கொண்டனர். நடிகர் அஜித்தின் பில்லா, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் யுவன்.

நடிகர் அஜித் குமார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா

இறுதியாக, நேர்கொண்ட பார்வை படத்துக்கு யுவன் இசையமைத்திருந்தார். அதன்பின் இக்கூட்டணி இணையவில்லை.

தற்போது, இருவரும் மீண்டும் சந்தித்துக்கொண்டது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லடாக் வன்முறை: தில்லியில் இன்று ஆலோசனைக் கூட்டம்?

பணக்கஷ்டம் குறையும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சென்னை தெருக்களுக்கு நடிகா் ஜெய்சங்கா், எஸ்.வி.சேகா் தந்தை பெயா்ப் பலகைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

லஞ்ச புகாா்: எஸ்ஐ உள்பட 5 போ் பணியிடை நீக்கம்

காஞ்சிபுரம் அரசு இசைப் பள்ளியில் அக். 2-இல் மாணவா் சோ்க்கை: ஆட்சியா்

SCROLL FOR NEXT