மெர்சல் போஸ்டர்.  படம்: எக்ஸ் / டிஎஸ்எல்
செய்திகள்

மறுவெளியீடானது மெர்சல் திரைப்படம்!

விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது.

DIN

விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் இன்று (ஜூன்.20) மறுவெளியீடாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை (ஜூன்.22) முன்னிட்டு இந்தப் படம் மறுவெளியீடாகியுள்ளதாகப் படக்குழு கூறியுள்ளது.

ஏற்கனவே, மறுவெளியீடான விஜய்யின் கில்லி திரைப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அசத்தியது.

கடைசியாக மறுவெளியீடான வெளியான சச்சின் திரைப்படமும் நல்ல லாபத்தைக் கொடுத்ததாக அதன் தயாரிப்பாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

அட்லி இயக்கத்தில் மெர்சல் திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியானது.

இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், வடிவேலு என சிறப்பான கூட்டணி இருந்தது.

இந்தப்படும் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. அதனாலேயே படத்தின் வசூலும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் இனிமேல் படங்களில் நடிக்க மாட்டேன் எனக் கூறியதால் கடைசி படமான ஜனநாயகனில் நடித்து வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடவிருக்கிறார்.

மெர்சல் போஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே மிகப் பயங்கர நிலநடுக்கம் எது? ஏன்?

விபத்தில் சிக்கிய மயிலை 7 நிமிடத்தில் வனத்துறையிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்: வைரலாகும் விடியோ!

ம.பி.யில் 23,000 பெண்கள், சிறுமிகளைக் காணவில்லை!

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

SCROLL FOR NEXT