செய்திகள்

பவன் கல்யாணின் புதிய படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஆந்திர துணை முதல்வரின் புதிய திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

DIN

ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வரும், பிரபல நடிகருமான பவன் கல்யாணின் ”ஹரி ஹர வீர மல்லு” எனும் புதிய திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் பவன் கல்யாணின் நடிப்பில், இயக்குநர்கள் கரிஷ் ஜகார்லாமுடி மற்றும் ஏ. எம். ஜோதி கிருஷ்ணா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள, இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில முக்கிய காரணங்களால், அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வரலாற்று கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஜூலை 24 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இத்துடன், ஹரி ஹர வீர மல்லு திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மோகன்லாலின் ஊட்டி பங்களாவின் ஒரு நாள் வாடகை இவ்வளவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"BJPக்கு புதிய அடிமைகள் கிடைப்பார்கள், ஆனால்..!": உதயநிதி | செய்திகள்: சில வரிகளில் | 09.10.25

வடகிழக்குப் பருவமழை: முதல் புயல் சின்னம் எப்போது?

ரிச்சா கோஷ் அதிரடி; தென்னாப்பிரிக்காவுக்கு 252 ரன்கள் இலக்கு!

பைசன் காளமாடன்: புதிய பாடல் வெளியீடு!

அன்பே... அன்பே... ரச்சிதா, விசித்ரா!

SCROLL FOR NEXT