மெளனம் பேசியதே தொடரில் நிஷா படம் - இன்ஸ்டாகிராம்
செய்திகள்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு... சின்ன திரையில் மீண்டும் நிஷா!

நடிகை நிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்ன திரையில் மீண்டும் நடிக்கவுள்ளார்.

DIN

நடிகை நிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்ன திரையில் மீண்டும் நடிக்கவுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் இவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் அசோக், பெளசி ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் மெளனம் பேசியதே தொடர், ரொமான்டிக் டிராமாவாக ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் நாயகியாக நடித்து வந்தவர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன். ஆரம்பத்தில் உற்சாகமாக நடித்துவந்த நிலையில், பின்னர் தனிப்பட்ட காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக பெளசி இப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மெளனம் பேசியதே

சின்ன திரையில் பெளசிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளதால், மெளனம் பேசியதே தொடருக்கான பார்வையாளர்களும் தற்போது அதிகரித்துள்ளனர். மாறுபட்ட கதைக்களத்துடன் நடிகர்களின் நடிப்பும் பாராட்டத்தக்க வகையில் உள்ளதால், இத்தொடர் தொடர்ந்து மதிய நேர ரசிகர்களைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இந்தத்தொடரில் நடிகை நிஷா கிருஷ்ணன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இதனால், கதையில் திருப்பங்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிஷா கிருஷ்ணன்

எண்ணற்ற திரைப்படங்களிலும் சின்ன திரை தொடர்களிலும் நடித்துள்ள நிஷா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதத்தில் திரெளபதியாக நடித்து கவனம் ஈர்த்தவர். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் இவரின் கணவராவார்.

தற்போது நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்ன திரையில் நிஷா நடிக்கவுள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சகோதரனின் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய சீரியல் நடிகை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாகா எல்லையில் தேசியக் கொடி இறக்கும் நிகழ்ச்சி! வீறுநடை போட்ட ராணுவ வீரர்கள்!

மலையாள திரையுலகில் முதல் பெண் தலைவர்! சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றி!

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின் - புகைப்படங்கள்

நிழலும் அழகு... சாக்‌ஷி அகர்வால்!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

SCROLL FOR NEXT