நடிகர் லால் 
செய்திகள்

நான் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணம்: லால்

படங்கள் இயக்குவதை நிறுத்தியது குறித்து லால் பேசியது....

DIN

நடிகர் லால் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தியதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

தமிழ், மலையாளம் மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் லால். இருமொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக, குணச்சித்தர நடிகராக நடித்து தனக்கென தனி அடையாளத்தைப் பெற்றவர்.

நடிகர் என்பதைத் தாண்டி லால் இயக்குநராகவும் அறியப்பட்டவர். 1984-ல் 'பப்பன் பிரியப்பட்ட பப்பன்' படத்தின் மூலம் எழுத்தாளராக சினிமாவுக்கு அறிமுகமான லால், மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘நாடோடிக்காத்து’ படத்தின் எழுத்தாளர் ஆவார்.

தொடர்ந்து, ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், மனிச்சித்திரதாழு (சந்திரமுகி படத்தின் மூல வடிவம்) உள்ளிட்ட படங்களுக்கு இணை இயக்குநராக பணியாற்றியவர், 2 ஹரிஹர் நகர் படத்தின் மூலம் இயக்குநரானார்.

பின், கோஸ்ட் ஹவுஸ் இன், கிங் லையர் உள்ளிட்ட சில படங்களை இயக்கி ஓரளவு வெற்றிகரமான இயக்குநராகவும் மாறினார். இறுதியாக, 2021 ஆம் ஆண்டில் வெளியா சுனாமி படத்தில் இணை இயக்குநராக இருந்தார். அதன்பின், படங்களை இயக்கவில்லை.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லால், “காலத்திற்கேற்ப மக்கள் மாறுகிறார்கள். இதை, புரிந்துகொள்ளாத பலர் இறுதிவரை எடுத்ததையே எடுத்துக்கொண்டிருப்பார்கள். இந்த விஷயம் எனக்கு புரிந்ததும் நான் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

SCROLL FOR NEXT