இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இயக்குநர் ஸ்பைக் லீ.  படம்: இன்ஸ்டா / ஏ.ஆர்.ரஹ்மான்.
செய்திகள்

ஆஸ்கர் வென்ற அமெரிக்க இயக்குநரைச் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான்!

அமெரிக்க இயக்குநரைச் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து...

DIN

ஆஸ்கர் வென்ற அமெரிக்க இயக்குநர் ஸ்பைக் லீயை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்து குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரான்சில் நடைபெறும் பாரிஸ் பேஷன் வீக் நிகழ்ச்சியை முன்னிட்டு அமெரிக்க லெஜெண்டரி இயக்குநர் ஸ்பைக் லீயை சந்தித்து பேசினார்.

ஸ்பைக் லீ திரைப்படங்கள் கறுப்பின மக்களின் எழுச்சியைப் பேசுவதாக அமைந்துள்ளன.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஆஸ்கர் விருது வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராமாயணம் படத்துக்காக இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் உடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் பணியாற்ற இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில், இவர்கள் சந்தித்தது திரையுலகில் பேசுபொருளாகியுள்ளது.

ஸ்பைக் லீ கடைசியாக 2025-இல் ஹையஸ்டு டூ லோவஸ்ட் எனும் த்ரில்லர் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் கேன்ஸ் திஐ விழாவில் திரையிடப்பட்டது.

அமெரிக்காவில் இந்தப்படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. வரும் நவம்பரில் ஆப்பிள் டிவி ப்ளஸ் எனும் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.

இந்த சந்திப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் அமீன் அமெரிக்க இசையமைப்பாளர் வில்லியம்ஸைச் சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு நாள்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

ரெப்போ விகிதத்தில் மாற்றமில்லை: ஆா்பிஐ அறிவிப்பு

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

ஜீவாவின் புதிய படப்பெயர்!

முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்: அண்ணாமலை கண்டனம்

SCROLL FOR NEXT