மைசா பட போஸ்டர்.  படம்: எக்ஸ் / ரஷ்மிகா மந்தனா.
செய்திகள்

ரஷ்மிகாவின் புதிய அவதாரம்: மிரட்டும் முதல்பார்வை போஸ்டர்!

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மைசா பட போஸ்டர் வெளியாகியுள்ளது.

DIN

நடிகை ரஷ்மிகா மந்தனாவின் மைசா என்ற புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார் ரஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா நடிப்பில் குபேரா வெளியாகி, இதுவரையில் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூல் பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் மைசா எனும் புதிய படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

நேற்று வெளியான போஸ்டரில் காட்டுப் பகுதியில் கையில் ஈட்டியுடன் சண்டையிடப் போவது போன்று ரஷ்மிகா நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கதைக்களமானது, கதாநாயகியை மையமாக வைத்து உருவாவதாகத் தெரிகிறது.

புதிய தயாரிப்பு நிறுவனமான ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில் இந்தப் படம் உருவாகிறது.

இது குறித்து ரஷ்மிகா நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படமாக இது உருவாகிறது.

summary

The first look poster of actress Rashmika Mandanna's new film Mysaa has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழங்குடியின மகளிருக்கு சுய உதவிக் குழுக்கள் மூலம் மானியக் கடன் வழங்க கோரிக்கை

தபால் துறையில் புதிய மென்பொருள் அறிமுகம்: ஆக. 2 பரிவா்த்தனை இல்லாத நாளாக அறிவிப்பு

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: இன்று நடைபெறும் வாா்டுகள்

கடன் பத்திரங்களை வெளியிடும் ஐசிஎல் ஃபின்காா்ப்

தமிழகத்தில் ரூ.500 கோடியில் 100 பாலங்கள்: மறு ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு

SCROLL FOR NEXT