தக் லைஃப் ஓடிடி தேதி இதுவா?
தக் லைஃப் படத்தின் தேதி குறித்து...
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவான ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி வெளியானது.
படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சிம்பு, த்ரிஷாவின் கதாபாத்திரங்கள் அளித்த ஏமாற்றம் என பல விஷயங்கள் ரசிகா்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தது.
Advertisement
ஒட்டுமொத்தமாக, இப்படம் உலகளவில் ரூ. 95 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்,தக் லைஃப் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் இப்படம் திரைக்கு வந்த 8 வாரங்கள் கழித்தே ஓடிடிக்கு வருவதுபோல் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், படத்திற்குக் கிடைத்த எதிர்மறையான விமர்சனங்களால் திட்டமிட்ட தேதிக்கு முன்பே வெளியாகவுள்ளது.
kamal haasan's thug life movie will release on netflix