செய்திகள்

'என்னப்பா இப்படி எழுதியிருக்க...’ டிராகன் இயக்குநரை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து - ரஜினி சந்திப்பு...

DIN

நடிகர் ரஜினிகாந்த் டிராகன் பட இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கல்லூரியில் ஒழுங்காகப் படிக்காத நாயகன் குறுக்கு வழியில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதை கேள்விகேட்கும்படியான படமாக டிராகன் உருவாகியிருந்ததுடன் வணிக ரீதியாகவும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியுள்ளது.

இதையும் படிக்க: கமல் - 237 பணிகள் தீவிரம்!

சாதாரண கமர்சியல் படம் என்பதைத் தாண்டி, திரை எழுத்தாகவும் பலரின் உணர்வுகளைத் தொட்டதால் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு பாராட்டுகள் கிடைத்தன.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன் வீட்டிற்கே அழைத்து அஸ்வத்தை பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அஸ்வத், “அற்புதமா எழுதியிருக்கீங்கன்னு ரஜினி சார் பாராட்டினார். நல்ல படம் பண்ணனும், படத்தைப் பார்த்துட்டு ரஜினி சார் நம்மளை வீட்டுக்குக் கூப்பிட்டு பேசணும்.. இதெல்லாம் இயக்குநர் ஆகணும்னு உழைக்கிற பல உதவி இயக்குநர்களோட கனவு. கனவு நிறைவேறிய நாள் இன்று” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நீண்ட நாள்களாக நல்ல படங்களை ஆதரித்து பதிவிடுவதுடன் தொடர்புடைய இயக்குநர் மற்றும் நடிகரை நேரில் அழைத்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT