ஹைவே படத்தின் போஸ்டர்.  படம்: எக்ஸ் / என்ஜியி மூவிஸ்
செய்திகள்

ஆலியா பட்டின் ஹைவே..! மகளிர் நாளுக்காக மறுவெளியீடு!

மகளிர் நாளை முன்னிட்டு ஆலியா பட் நடித்த ஹைவே திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது.

DIN

மகளிர் நாளை முன்னிட்டு ஆலியா பட் நடித்த ஹைவே திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது.

பிரபல ஹிந்தி இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில் 2014இல் ஹைவே திரைப்படம் வெளியானது. இதில் ஆலியா பட், ரந்தீப் ஹூடா நடித்துள்ளார்கள்.

நதியாத்வாலா தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார்.

மகளிர் நாளை முன்னிட்டு மார்ச். 7ஆம் தேதி முதல் மார்ச் 13ஆம் தேதி வரை இந்தப்படம் பிவிஆர், ஐநாக்ஸ் திரையரங்குகளில் வெளியாகிறதென படக்குழு தெரிவித்துள்ளது.

சிறுமி வன்கொடுமை, பெண்களின் பாதுகாப்பு குறித்து சிறப்பாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தைக் குறித்து தயாரிப்பாளர் கூறியதாவது:

ஆலியா பட், ரந்திப் ஹூடா மிகச் சிறப்பாக நடித்த காலத்தினால் அழியாத கிளாசிக்கான இந்தப் படத்தை மீண்டும் ஒருமுறை திரையரங்கில் பார்க்கத் தகுதியானது.

மகளிர் நாளில் இந்த அழகான படத்தை ரசிகர்கள் பார்க்க மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்ததுக்கு மகிழ்ச்சி அடைகிறேன் எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி, காரைக்காலில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று அரை நாள் விடுமுறை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை!

மதுரையில் தொடங்கியது உலகக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி தொடர்!

டிட்வா புயல்: சென்னையில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை!இன்று எங்கெங்கு மழை?

SCROLL FOR NEXT