இதயம் 2 தொடர் 
செய்திகள்

விரைவில் இதயம் -2 தொடர்! நடிகர்கள் குறித்து அறிவிப்பு!

தமிழ் சின்ன திரையில் மேலுமொரு தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது.

DIN

தமிழ் சின்ன திரையில் மேலுமொரு தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது.

மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இதயம் தொடரின் மற்றொரு பாகமாக இந்தத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இதயம் -2 என்ற பெயரில் ஒளிபரப்பாகவுள்ள இத்தொடரில் ஜனனி அசோக் குமார் மற்றும் ரிச்சர்ட் ஜோஷ் முன்னணி பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தனது வசீகரமான தோற்றத்தாலும் ஆழ்ந்த நடிப்புத் திறமையாலும் ரசிகர்களைக் கவர்ந்த ஜனனி அசோக் குமார், இதயம் முதல் பாகத்திலும் நடித்திருந்தார்.

இவர்களுடன் சுகன்யா, ஹேமா தயாள், சுதர்சனம், ஆர்த்தி ராம்குமார், சிங்கராஜா, தீபா, சஞ்சய், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண், செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் மீது காதல் கொள்கிறார். ஆனால், தனது இயலாமை மற்றும் சுற்றுப்புற சூழல் காரணமாக அதனை வெளிப்படுத்தற்கு தயங்குகிறார் என்ற உணர்வுப்பூர்வமான தளத்தைக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் அடிக்கடி புகைப்படங்களை பதிவேற்றுவதன் மூலம் ரசிகர்களுடன் நெருக்கமாகவுள்ள ஜனனி அசோக் குமார், நண்பேண்டா படத்தின் மூலம் நடிப்புத் துறையில் அறிமுகமானார்.

ஜனனி அசோக் குமார்

அதோடு மட்டுமின்றி எண்ணற்ற சின்ன திரை தொடர்களிலும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். மாப்பிள்ளை, செம்பருத்தி, மெளன ராகம், ஆயுத எழுத்துஉள்ளிட்டத் தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக , நாம் இருவர் நமக்கு இருவர் -2 தொடரில் இவரின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.

தற்போது இதயம் -2 தொடரில் ஜனனியின் நடிப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

இதையும் படிக்க | விரைவில் முடிகிறது ரோஜா -2 தொடர்!

இதையும் படிக்க | பாக்கியலட்சுமி, அய்யனார் துணை தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ஜனனி அசோக் குமார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

SCROLL FOR NEXT