ரெட்ரோ: 2-ஆவது பாடல் ரிலீஸ் தேதி!
சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் 2ஆவது பாடல் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் 2ஆவது பாடல் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார்.
சமீபத்தில் வெளியான டீசர், முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் ’கனிமா’ என்ற பெயரில் 2ஆவது பாடல் மார்ச்.21ஆம் தேதி வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பதிவில், “எங்கள் பாய்ஸுகளுக்காக...”எனக் குறிப்பிட்டுள்ளார்.