நடிகர் கமல் ஹாசனின் இந்தியன் - 3 திரைப்படம் கைவிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் கடந்தாண்டு ஜூலை 12 அன்று உலகம் முழுவதும் வெளியானது.
லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றதுடன் கடுமையான இணைய கிண்டல்களை எதிர்கொண்டது. ஆனாலும், இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்தது.
இதையும் படிக்க: எஸ். எஸ். ராஜமௌலி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு!
தொடர்ந்து, இயக்குநர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தில் கவனம் செலுத்தினார். அப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இந்த நிலையில், இந்தியன் - 2 தோல்வியால் இந்தியன் - 3 படப்பிடிப்பில் மேற்கொண்டு செலவு செய்ய லைகா விரும்பாததால் படத்தைக் கைவிடும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.
அதேநேரம், கமல்ஹாசன் விருப்பம் தெரிவித்தால் படத்தின் உரிமையை வேறு தயாரிப்பு நிறுவனத்திற்கு வழங்க லைகா புரடக்ஷன்ஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.