ஓடிடி DIN
செய்திகள்

ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்! இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தொடர்பாக...

DIN

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

நடிகர் தனுஷ் இயக்கத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நாயகனாக நடித்துள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் நாளை (மார்ச் 21) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான பேபி & பேபி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் (மார்ச் 21) நாளை காணலாம்.

குஞ்சக்கோ போபன் நடிப்பில் உருவாகி வெற்றிபெற்ற ஆஃபிஸர் ஆன் டூட்டி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகியுள்ளது.

இதையும் படிக்க: சிறகடிக்க ஆசை முத்துவுக்கு குவியும் வாழ்த்து!

நடிகை லாஸ்லியாவின் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படம் ஆஹா தமிழ் ஓடிடியில் மார்ச் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது.

சக்திவேல் செல்வகுமார் இயக்கத்தில் விவேக் பிரசன்னா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் வெளியான ரிங் ரிங் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடியியில் நாளை (மார்ச் 21) வெளியாகிறது.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான 2கே லவ் ஸ்டோரி படத்தை ஆஹா தமிழிலும் ஃபயர், காதல் என்பது பொதுவுடமை ஆகிய இரு படங்களை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்திலும் பொன்மேன் படத்தை ஹாட்ஸ்டார் தளத்திலும் ராமம் ராகவம் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் கண்கள்... ஜன்னத் ஜுபைர்!

மெழுகு டாலு நீ.... ஷிவானி நாராயணன்!

இவர் யாரோ...?

அஜித்தைச் சந்தித்த பிரபல இயக்குநர்கள்! ஏன்?

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

SCROLL FOR NEXT