வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம். 
செய்திகள்

மகனாக இருந்தாலும் துருவ் எனக்குப் போட்டிதான்: விக்ரம்

வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் பேசியது குறித்து...

DIN

மகனாக இருந்தாலும் நடிகர் துருவ் விக்ரம் எனக்கு போட்டிதான் என்று வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சியான் விக்ரம் பேசியுள்ளார்.

கோவை மலுமிச்சாம்பட்டி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில் இயக்குநர் அருண்குமார் இயக்கிய வீர தீர சூரன் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சியான் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றினர்.

அப்போது, நடிகர் விக்ரம் பேசுகையில், “வீர தீர சூரன் படம் திரையரங்குகளில் நாளை(மார்ச் 27) வெளியாகிறது. காதல் என்பது மிக முக்கியம், அவங்களுகாக கேர் பண்றது ரொம்ப முக்கியம். அதற்காக இந்த படத்தை பாருங்கள்.

இதுவரை நடித்த படத்தைவிட இந்த படம் நன்றாக இருக்கும். கல்லூரியில் படிக்கும்போது நான் ரொம்ப நல்ல பையன், நான் சிறுவனாக இருக்கும்போது வாடகை வீடுதான், சாதிக்க வேண்டும் என கனவு கண்டேன், சாதித்து விட்டேன்” என்றார்.

நடிகர் துருவ் விக்ரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த விக்ரம், “நடிகர் என்று கேட்டால் நான் பதில் சொல்ல மாட்டேன், மகனாக இருந்தாலும் அவர் எனக்குப் போட்டிதான், என்னுடைய மகன் நன்றாக இருக்கிறான் ” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, விக்ரம் மற்றும் துஷாரா ஆகியோர் மாணவர்களுடன் சுயபடம் எடுத்தும் நடனமாடியும் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT