எம்புரான் போஸ்டர்.  
செய்திகள்

எம்புரான் முதல்நாள் வசூல் விவரம்!

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் வசூல் குறித்து...

DIN

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்தின் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

எம்புரான் திரைப்படம் நேற்று (மார்ச்.27) திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக்கிய லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

நடிகர் மோகன்லாலுடன் டோவினோ தாமஸ், மஞ்சு வாரியர், இந்திரஜித் சுகுமார் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வசூலில் அசத்தும் எம்புரான்

முன்பதிவிலேயே பல சாதனைகளை படைத்த எம்புரான் வலுவான காட்சிகளைக் கொண்டதாக உருவாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

மோகன்லாலும் வரலாறு படைத்தோம் எனக் குறிப்பிட்டு வருகிறார்.

இந்நிலையில் முதல்நாளில் எம்புரான் சுமார் ரூ.22 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொழிவாரி வசூல் விவரம்

மலையாளத்தில் - ரூ.19.45 கோடி

தெலுங்கில் - ரூ.1.2 கோடி

தமிழில் - ரூ.80 லட்சம்

ஹிந்தியில் - 50 லட்சம்.

கன்னடத்தில் - ரூ.5 லட்சம்.

இருப்பினும் படத் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூபிளி ஹில்ஸ் தொகுதியில் மகந்தி சுனிதா வேட்புமனு தாக்கல்!

விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடியில் சிக்கினார்! ரூ. 13 லட்சம் இழப்பு!!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

தேசிய சுங்கச் சாவடிகளில் அசுத்தமான கழிப்பறை குறித்த தகவலுக்கு ரூ. 1,000 வெகுமதி!

அலைபாயும் ஒரு கிளி... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT