துல்கர் சல்மானின் புதிய திரைப்படத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பிரபல இயக்குநர் இணைந்துள்ளார்.
மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் நடிகர் துல்கர் சல்மான். சமீபமாக, தெலுங்கு இயக்குநர்களின் இயக்கத்தில் அவர் கதாநாயகனாக நடித்து வெளியான பான் இந்தியா படங்களான சீதா ராமம், லக்கி பாஸ்கர் போன்ற திரைப்படங்கள் மிகப் பெரியளவில் வெற்றியடைந்தன.
இந்நிலையில், ஷேன் நிகாம், அந்தோனி வர்கீஸ் மற்றும் நீரஜ் மாதவன் ஆகியோர் நடித்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற ‘ஆர்.டி.எக்ஸ்.’ படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.
’ஐயம் கேம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தில், மீண்டும் அந்தோனி வர்கீஸ் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இத்துடன், தற்போது தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மிஷ்கின் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள போஸ்டரை தங்களது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த இயக்குநர் ஹிதாயத் மற்றும் மிஷ்கின் ஆகியோர் அதனை உறுதி செய்துள்ளார்.
முன்னதாக, சமீபகாலமாக விஜய்-ன் லியோ, டிராகன் உள்ளிட்ட படங்களின் துணை நடிகராக வலம் வந்துக்கொண்டிருக்கும் மிஷ்கின் ‘டிரெயின்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, நாஸர், ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: விஜே சித்து இயக்கி, நடிக்கும் படம் அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.