ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் 
செய்திகள்

பாலிவுட் ஸ்டைலில் திரைப்படம் எடுக்க ஆசை: டாம் க்ரூஸ்!

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் விருப்பம் குறித்து...

DIN

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் பாலிவுட் திரைப்படங்களின் மீதான தனது விருப்பம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

டாம் க்ரூஸின் அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே பிரபலமான அவரது ‘மிஷன்: இம்பாஸிபிள்’ திரைப்பட வரிசையில் 8வது பாகமான, ‘மிஷன்: இம்பாஸிபிள் - தி ஃபைனல் ரெக்கனிங்’ இந்தியத் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்துக்கான சர்வதேச விளம்பர (பிரமோஷன்) நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர் இந்தியாவின் கலாசாரம், மக்கள் மற்றும் சினிமாவின் மீதான தனது அனுபவம் மற்றும் விருப்பம் குறித்து பகிர்ந்துள்ளார்.

முன்பு தான் இந்தியாவுக்கு வந்த அனுபவங்களைப் பற்றி பேசிய டாம் க்ரூஸ், அப்போது அவர் தாஜ் மஹால் சென்றதையும், மும்பை நகரத்தில் நேரம் செலவிட்டத்தையும் பற்றி கூறியுள்ளார். மேலும், இந்தியா அற்புதமான மக்களையும், கலாசாரத்தையும் கொண்ட நாடு எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

”நான் இந்தியாவுக்கு மீண்டும் சென்று அங்கு ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். எனக்கு பாலிவுட் படங்கள் மிகவும் பிடித்தமானவை. அதில், நீங்கள் செய்யும் அனைத்துக்கும் தேவையான திறன் இயற்கையாகவே அமைந்துள்ளது. படத்தில் வரும் காட்சி திடீரென பாடலாக மாறுவது எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அதையே விரும்புகின்றேன். அதைப் போன்ற, பல்வேறு நாடுகளின் பாடல்களை ரசித்தே நான் வளர்ந்துள்ளேன்.” என அவர் பேசியுள்ளார்.

இத்துடன், பாலிவுட் ஸ்டைலில் திரைப்படம் எடுக்க விரும்புவதாகக் கூறிய டாம் க்ரூஸ், இந்தியத் திரைப்படங்களில் வரும் ஆடல்களும் பாடல்களும் மிகவும் வேடிக்கையானது மற்றும் அற்புதமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் டாம் க்ரூஸின் ‘மிஷன்: இம்பாஸிபிள்- தி ஃபைனல் ரெக்கனிங்’ திரைப்படம் அமெரிக்காவுக்கு முன்னதாக தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று (மே 17) இந்தியாவில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பு

திண்டுக்கல் மாநகராட்சி நிதி முறைகேடு: முன்னாள் ஆணையா் உள்பட 6 போ் மீது வழக்கு

கட்டடத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

பானிபூரி விற்பனையாளா்களை தாக்கிய சிறுவா்கள் கைது

நெல்லையப்பா் கோயில் குறித்த வழக்கு: அறநிலையத் துறை அதிகாரி முன்னிலையாக உத்தரவு

SCROLL FOR NEXT