ஐஸ்வர்யா லட்சுமி 
செய்திகள்

அடுத்த பட வாய்ப்புக்கு புகழ் தேவைப்படுகிறது: ஐஸ்வர்யா லட்சுமி

சினிமாவிலுள்ள புகழ் குறித்து ஐஸ்வர்யா லட்சுமி...

DIN

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சினிமாவில் புகழோடு இருப்பது குறித்து பேசியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழிலும் நல்ல நடிகையாக உருவெடுத்துள்ளார். கதையம்சமுள்ள தமிழ்ப் படங்களில் இயக்குநர்களின் தேர்வுப்பட்டியலில் ஐஸ்வர்யா முக்கியமான இடத்திலேயே இருக்கிறார்.

இவர் நடித்த மாமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது. அடுத்ததாக, இவர் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் படம் வெளியாகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஐஸ்வர்யா லட்சுமி, “நான் மருத்துவராக இருந்து திரைத்துறைக்கு வந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக மருத்துவப் பயிற்சி செய்யாததால் இப்போது என்னை டாக்டர் என அழைக்கக்கூடாது. சினிமாவில் நிறைய சம்பாதிக்கலாம், புகழ் கிடைக்கும் என பலரும் நினைக்கின்றனர். பணத்தேவை ஒருவரின் தேவையைப் பொறுத்துதான். ஆனால், எனக்கு அடுத்த படம் அமைய வேண்டும் என்றால் புகழைத் தக்க வைக்க வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது.

எவ்வளவு பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள் என்பதைப் பொறுத்தே நடிகைகளுக்கு வாய்ப்புகள் வருகின்றன. அதனால், மார்க்கெட்டிங், அடிக்கடி நல்ல ஆடைகளில் புகைப்படங்களை வெளியிடுதல் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டியுள்ளது. மருத்துவர் தினமும் பயிற்சி செய்வதுபோல் நடிகர்களும் பணியாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். சோம்பேறியாக மாறினால் அவ்வளவுதான்.” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT