செய்திகள்

வாடிவாசல் எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பல்ல: வெற்றி மாறன்

வாடிவாசல் குறித்து வெற்றி மாறன் கருத்து...

DIN

வாடிவாசல் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு இயக்குநர் வெற்றி மாறன் பதிலளித்துள்ளார்.

நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றி மாறன் கூட்டணியில் வாடிவாசல் திரைப்படம் உருவாகவுள்ளது. மறைந்த எழுத்தாளர் சி.சு. செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ நாவலைத் தழுவியே இப்படம் உருவாகிறது.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதல்கட்ட பணிகள் ஆரம்பமானதும் ஜூன் மாதம் படப்பிடிப்பும் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பங்கேற்ற வெற்றி மாறனிடம், வாடிவாசல் மீதான எதிர்பார்ப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு வெற்றி மாறன், “ரசிகர்களின் எதிர்பார்ப்பை வாடிவாசல் பூர்த்தி செய்தால் மகிழ்ச்சி அடைவேன். என் படங்களின் உருவாக்கத்தில் 100% உழைப்பையும் ஈடுபாட்டையும் கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய திரைப்படத்தின் எதிர்பார்ப்புகளுக்கு நான் பொறுப்பேற்க மாட்டேன். என் வேலை படங்களை இயக்குவது மட்டும்தான்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி: அக்.16 முதல் 20,378 பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

வள்ளலாா் அவதார தினம்: ஏழைகளுக்கு நல உதவிகள் அளிப்பு

தடுப்புக் காவலில் ரௌடி கைது

மெரீனா கடற்கரையில் எண்ணெய் கசிவு தடுப்பு ஒத்திகை

SCROLL FOR NEXT