முகப்பு
செய்திகள்

மும்பைக்குச் சென்ற தக் லைஃப் படக்குழுவினர்!

தக் லைஃப் படத்தின் படக்குழுவினர் புரமோஷனுக்காக மும்பைக்குச் சென்றுள்ளனர்.

Updated On : 20 மே, 2025 at 8:12 PM
தக் லைஃப் படக்குழுவினர். - படம்: ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷ்னல்
பகிர்:

தக் லைஃப் படத்தின் படக்குழுவினர் புரமோஷனுக்காக மும்பைக்குச் சென்றுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளதால் முதல் நாள் வணிகம் பெரியளவிலேயே நடைபெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Advertisement

படத்தின் புரமோஷன் பணிகளை ஏற்கனவே திட்டமிட்டு அதற்கேற்ப படக்குழு தீவிரமாக தொடங்கியுள்ளது.

நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் இணையத்தில் வெளியாகி வைரலானது.

சுகர் பேபி எனும் 2-ஆவது பாடல் நாளை (மே.21) வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், மும்பையில் டிரைலர் வெளியிட்டு நிகழ்வுக்கு படக்குழுவினர் சென்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.