செய்திகள்

‘பொறாமையா இருக்கு..’ கமல் ஹாசனால் கண்கலங்கிய ஜோஜூ ஜார்ஜ்!

ஜோஜூ ஜார்ஜைப் பாராட்டிய கமல்ஹாசன்...

DIN

நடிகர் கமல் ஹாசன் தன்னைப் பாராட்டிய மகிழ்ச்சியில் ஜோஜூ ஜார்ஜ் கண்கலங்கினார்.

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், மணிரத்னம், சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவான பாடல்கள் அனைத்தும் மேடையில் பாடப்பட்டு ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் கமல் ஹாசன், “நடிகர் ஜோஜூ ஜார்ஜை யாரென்று எனக்குத் தெரியாமல் இருந்தது. ரெட்ட படத்தில் அவரின் நடிப்பைப் பார்த்தேன். நானும் 30-க்கும் மேற்பட்ட இரட்டை வேடங்களில் மீசை, தாடியை எடுத்து சிறிய மாறுதல்களுடன் நடித்திருக்கிறேன்.

ஆனால், தன்னுடைய ஆரம்ப காலகட்டத்திலேயே ஜோஜூ இரட்டை வேடத்தில் எந்த தோற்ற மாறுதல்களும் இல்லாமல் இரண்டு சகோதர்களுக்கு இடையேயான வேற்றுமையை ஒரே காவல் நிலையத்திற்குள் நடித்து ஆச்சரியப்படுத்திவிட்டார். நான் பொறாமைப்படும் நடிகர்களில் ஒருவர் ஜோஜூ ஜார்ஜ்.” என்றார்.

இதைக்கேட்ட ஜோஜூ ஜார்ஜ், தனக்குக் கிடைத்த இந்த அங்கீகாரத்திற்காக சில நொடிகள் கண்கலங்கினார். மேலும், இதுகுறித்து பதிவிட்ட ஜோஜூ ஜார்ஜ், இந்தப் பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT