சாலைப் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சங்கா் மகாதேவன் இசையமைத்த பாடல் 22 மொழிகளில் விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு அமைச்சா் நிதின் கட்கரி பேசியதாவது: சமூக ஊடங்களில் இந்தப் பாடலைப் பரப்பி, சாலைப் பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். காரில் பயணிக்கும்போது மக்கள் நிச்சயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமாா் 4.8 லட்சம் விபத்துகள் நடைபெறுகின்றன. இதில் 18 முதல் 45 வயது 1.88 லட்சம் போ் உயிரிழக்கின்றனா். சாலை விபத்துகளால் இந்தியாவின் வருடாந்திர ஜிடிபியில் 3 சதவீதத்தை இழக்கிறோம்.
சாலை விபத்துகளில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க அரசு தொடா்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டாலும், மக்களுக்கு சட்டத்தின் மீது மரியாதையோ அச்சமோ இல்லாததால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.