செய்திகள்

கவனம் ஈர்க்கும் ஹரி ஹர வீர மல்லு பாடல்!

பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு பாடல் வெளியானது...

DIN

ஹரி ஹர வீர மல்லு படத்தின் பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

ஆந்திரத்தின் துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் 3 படங்கள் (ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங், ஓஜி) தயாராகி வருகின்றன.

இதில், ஹரி ஹர வீரமல்லு படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. கிறிஸ் ஜகர்லமுடி, ஜோதி கிருஷ்ணா இணைந்து இயக்கிய இப்படம் வருகிற ஜூன் 12 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்ற ‘தாரா தாரா’ என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர்.

நாயகி நிதி அகர்வாலின் நடன காட்சிகள் நன்றாக இருப்பதுடன் மரகதமணியின் இசையமைப்பும் ரசிகர்களைப் பெரிதாகக் கவர்ந்து வருகிறது. தமிழில் இப்பாடலைப் பா. விஜய் எழுத லிப்ஸியா, ஆதித்யா ஐயங்கார் ஆகியோர் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடி மீது தாக்குதல் முயற்சி? காங்கிரஸின் உண்மை முகம்..! | செய்திகள் சில வரிகளில் | 05.02.26

கேள்விகளால் பீதி.. பொய்களுக்குள் தஞ்சமடைந்த பிரதமர் மோடி: ராகுல் விமர்சனம்!

எப்போதும்போல அப்பட்டமான பொய்: பிரதமர் மோடி உரையாடல் மீது காங்கிரஸ் விமர்சனம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

2 வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்!

SCROLL FOR NEXT