செய்திகள்

நடிகர் கமலுடன் முத்தக்காட்சி... அபிராமி விளக்கம்!

தக் லைஃப் திரைப்படத்தில் முத்தக்காட்சியில் நடித்தது குறித்து அபிராமி பேசியுள்ளார்...

DIN

நடிகர் கமல் ஹாசனுடன் முத்தக்காட்சியில் நடித்தது குறித்து அபிராமி விளக்கமளித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டிரைலர், பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புரமோஷன்களும் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் சில விமர்சனங்களும் எழுந்தபடியே உள்ளது.

அப்படி, தக் லைஃப் டிரைலரில் நடிகை அபிராமியைக் கமல்ஹாசன் முத்தமிடும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதைப் பார்த்தவர்களில் சிலர், இந்த வயதிலும் முத்தக்காட்சியெல்லாம் தேவைதானா? என விமர்சித்தனர்.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை அபிராமி, “தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தக்காட்சி ஒரு காட்சியின் முக்கியத்துவத்திற்காக வைக்கப்பட்டது. சில நொடிகள் மட்டுமே வரும். டிரைலரில் இடம்பெற்றதால் வைரலாகிவிட்டது. இன்று முத்தக்காட்சிகளெல்லாம் சாதாரணம். பலர் நடிக்கும்போது விமர்சனங்கள் எழுவதில்லை. ஆனால், பிரபல நடிகர் ஒருவர் முத்தக்காட்சியில் நடிக்கும்போதுதான் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்சிசி பயிற்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் அதிகாரிப் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

ஏஐ வருகை! 2030-க்குள் 90% வேலை காலி - ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

ஆஸி. டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்!

ஆசிய கோப்பைக்காக புதிய சிகையலங்காரம்..! வைரலாகும் ஹார்திக் புகைப்படங்கள்!

தொடர் மழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஹிமாசல்: 360 பேர் பலி, 1001 சாலைகள் மூடல்!

SCROLL FOR NEXT