இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கைதி - 2 திரைப்படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி - 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகராக அறிமுகமாகும் படத்தில் இணைந்தார்.
இந்தக் குழப்பங்களால், கைதி - 2 திரைப்படம் கைவிடப்படுவதாகத் தகவல்களும் கசிய ஆரம்பித்தன. முக்கியமாக, படத்தின் பட்ஜெட் மற்றும் லோகேஷ் கனகராஜின் சம்பளத்தாலே இது கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், அத்தகவலில் உண்மையில்லையாம். தயாரிப்பு தரப்பிற்கும் லோகேஷ் கனகராஜுக்கும் நல்ல உறவு இருப்பதாகவும் இப்படம் அடுத்தாண்டு துவங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.