கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டிரைலர் வெளியீடு!
நடிகை கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டிரைலர் வெளியானது.
நடிகை கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜேகே சந்துரு இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் கதை நாயகியாக நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' படம் தி ரூட், தி ஃபேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ளது.
ராதிகா சரத்குமார், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
மகாராஜா படத்தில் பணிபுரிந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தாண்டே நிறைவடைந்து, கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே வெளியிடப்படுவதாய் இருந்த நிலையில், தற்போது நவம்பர் 28 ஆம் தேதியில் வெளியிடப்படுகிறது.
summary