பிரணவ் மோகன்லால் 
செய்திகள்

தொடர் வெற்றியைப் பெற்ற பிரணவ் மோகன்லால்!

பிரணவ் மோகன்லால் படங்கள் வெற்றியடைந்து வருகின்றன...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பிரணவ் மோகன்லால் தொடர் வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளார்.

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்ந்துவரும் இளம் கதாநாயகனாக உள்ளார். அதேநேரம், மற் நடிகர்களைப் போல் இல்லாமல் உலகப் பயணங்களைச் செய்து வருவதுடன் பெரிய ஆடம்பரமில்லாத வாழ்க்கைச் சூழலையும் வைத்திருக்கிறார்.

இதனால், பல மலையாள நடிகர்களைப் போல் அடிக்கடி பொதுவெளியில் பிரணவ்வை சந்திக்க முடியாது. இதனால், அவர் எங்கிருப்பார், என்ன செய்து கொண்டிருப்பார் என மலையாள ரசிகர்களிடம் ஆர்வம் இருந்துகொண்டே இருக்கும்.

காரணம், பிரணவ்வின் பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஹிருதயப்பூர்வம் படத்திற்குப் பின் ஸ்பெயின் சென்று அங்கு தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் திரைப்படமும் ரூ. 50 கோடிக்கு அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

தற்போது, இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவான டீயஸ் ஈரே ஹாரர் படமும் ரூ. 80 கோடிக்கு அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால், பிரணவ் மோகன்லாலுக்கு தொடர் வெற்றிப்படங்கள் அமைந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டவா் 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்றவா் கைது

வீட்டில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருப்பத்தூா்: சிறப்பு முகாம்கள் மூலம் 18,935 மனுக்கள்

காா்-பைக் மோதல்: பொறியியல் மாணவா்கள் இருவா் மரணம்

SCROLL FOR NEXT