துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
இயக்குநர் செல்வராஜ் செல்வமணி இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரின் நடிப்பில் நவ. 14 ஆம் தேதி காந்தா வெளியானது.
பீரியட் கால கதையாக உருவான இது கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. ஆனால், இப்படத்தில் துல்கர் மற்றும் சமுத்திரகனியின் நடிப்புக்கு கவனம் கிடைத்துள்ளது.
மேலும், நாயகியான பாக்யஸ்ரீ போர்ஸ் நிறைய படங்களில் நடிக்காமலேயே குமாரி கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார் என பாராட்டுகள் கிடைத்துள்ளன. இதனால், பாக்யஸ்ரீ போர்ஸ் அடுத்தடுத்த தமிழ்ப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படம் 3 நாள்களில் ரூ. 24 கோடியை வசுலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: ரஜினிக்கு நடிக்க கற்றுக்கொடுத்த ஆசிரியர் மறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.