விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகளே என் மருமகளே, பூங்காற்று திரும்புமா தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை ஈர்ப்பதற்காகவும் டிஆர்பி ரேட்டிங்கை கூட்டுவதற்காகவும் தொடர்களின் ஒளிபரப்பு நேரத்தை மாற்றியமைப்பது வழக்கமான ஒன்று.
அதன்படி, மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், இன்று(நவ. 17) முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலை 6 மணிக்கு மகளே என் மருமகளே தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் இயக்குநர் ஹரிஸ் ஆதித்யா இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மகளே என் மருமகளே. இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.
அதேபோல, தாய் கிரேயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தொடரான பூங்காற்று திரும்புமா தொடர் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், இன்று(நவ. 17) முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் முத்தழகு தொடர் பிரபலம் ஷோபனா நாயகியாகவும் மோதலும் காதலும் தொடரின் நாயகன் சமீர் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். மேலும் ஆனந்த் பாபு, ஷ்யாம் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இதையும் படிக்க: பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.