நடிகர் அருண் விஜய் தன் பிறந்த நாளை உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் கொண்டாடியுள்ளார்.
நடிகர் அருண் விஜய் இன்று (19.11.2025) தனது பிறந்தநாளை அர்த்தமுள்ள வகையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக ‘உதவும் கரங்கள்’ ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் இணைந்து, தனது குடும்பத்துடன் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.
குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு உரையாடியதுடன், அங்குள்ள முதியோர்களின் தினசரி செயல்கள் குறித்து கேட்டறிந்து, அவர்களின் தேவைகள் மற்றும் சவால்கள் பற்றியும் கவனம் செலுத்தியுள்ளார்.
இன்று காலை நடைபெற்ற இந்த நிகழ்வில், அருண் விஜய் ‘உதவும் கரங்கள்’ இல்லத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் சேர்ந்து உணவு உட்கொண்டு ஒரு நினைவிடத்தக்க நேரத்தை பகிர்ந்துகொண்டார்.
விரைவில், அருண் விஜய் நடித்த ரெட்ட தல வெளியாகவுள்ள நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டம், அவரது வாழ்க்கையில் ஒரு சிறப்பான தருணமாக அமைந்துள்ளது.
இதையும் படிக்க: தனுஷ் விவகாரம்... விளக்கமளித்த நடிகை மன்யா ஆனந்த்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.