சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் தொடர் 1000 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
ஆனந்த ராகம் தொடர் நான் பிரைம் டைம்(Non Prime Time) என்று கூறப்படும் முக்கியத்துவம் பெறா நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் 1000 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி சாதனைப் படைத்துள்ளது.
தற்போதைய சூழலில் தொடர்கள், ஒரு ஆண்டு நிறைவு பெறுவதற்கு முன்பாகவே முடிக்கப்படுகிறது. மதிய நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆனந்த ராகம் தொடர், 1000 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தொடர் குழுவுக்கு தெரிவித்துள்ளனர். அதிலும் இந்தத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் அழகப்பன், அனுஷா ஹெக்டேவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
நடிகர் அழகப்பன் கனா காணும் காலங்கள், கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் போன்ற தொடர்களில் நடித்திருந்தாலும், நாயகனாக நடித்த முதல் தொடரிலேயே இவரின் நடிப்பு பலரால் பேசப்பட்டு வருகிறது.
ஆனந்த ராகம் தொடரில் நடிகை அனுஷா ஹெக்டே நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நடிகர் அழகப்பனும் நடிக்கின்றனர்.
மேலும் இந்தத் தொடரில் பிரீத்தி சஞ்சீவ், ஸ்வேதா செந்தில்குமார், இந்து செளத்ரி, ரஞ்சன் குமார், வைஷாலி, அஞ்சலி, வரதராஜன், ஜெயக்குமார், சிவரஞ்சினி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
2022 ஆகஸ்ட் முதல் ஒளிபரப்பாகிவரும் ஆனந்த ராகம் தொடர், திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இதையும் படிக்க: ஹரிஷ் கல்யாணின் டீசல்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.