மறுவெளியீட்டிலும் ஆட்டோகிராஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, அந்தப் படத்தின் இயக்குநர் சேரன் மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சேரன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆட்டோகிராஃப்.
இப்படம் பள்ளி, கல்லூரியின் கடந்தகாலக் காதல்களுடன் இளைஞர்களுக்கான உத்தேவகத்தை அளிக்கும் படமாக உருவாகியிருந்தது.
வெளியானபோது மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இப்படம், 21 ஆண்டுகள் கழித்து கடந்த நவ. 14 ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்பட்டது. மறுவெளியீட்டிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இது தொடர்பாக, இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள பதிவில், “ஆட்டோகிராப் திரைப்படம் 21 வருடங்களுக்கு பிறகும் ஒரு புதிய படம் போல வரவேற்ற மக்களுக்கு மனமார்ந்த நன்றி.
இந்தப் படம் தந்த அனுபவங்களை உங்களின் வாழ்க்கையோடு எடுத்துச்சென்று, சுகமான நினைவுகளை அசைபோட்டு, எதார்த்தங்களோடு இணைந்து வாழ, அனைவரின் வருங்கால வாழ்க்கையும் சிறப்படைய வேண்டுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி - புரி ஜெகன்நாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.