நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொண்டார்.
இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அறை எண் 305-ல் கடவுள். நடிகர்கள் பிரகாஷ் ராஜ், எம். எஸ். பாஸ்கர், சந்தானம், சாம்ஸ் உள்ளிட்டோர் நடித்த இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமானது.
இதில், நடிகர் சாம்ஸ் ஜாவா படித்து மிகப்பெரிய மென்பொருள் வல்லுநராக வளர்ந்த இளைஞராக நடித்திருந்தார். அக்கதாபாத்திரத்திற்கு இயக்குநர் ஜாவா சுந்தரேசன் எனப் பெயரிட்டிருந்தார்.
இக்கதாபாத்திரம் அன்றே பேசப்பட்டாலும் சமூக வலைதள மீம்ஸ்களால் சாம்ஸின் முகம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டது. இதனால், ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரத்திற்கென ரசிகர்களும் உள்ளனர்.
இந்த நிலையில், இயக்குநர் சிம்புதேவனைச் சந்தித்த நடிகர் சாம்ஸ் தன் பெயரை ஜாவா சுந்தரேசன் என மாற்றிக்கொள்ள ஒப்புதல் கேட்ட விடியோ வெளியாகியுள்ளது.
சாம்ஸ் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். அவர் திரைவாழ்வில் ஜாவா சுந்தரேசன் முக்கியமான கதாபாத்திரம் என்றாலும் அதையே தன் பெயராக மாற்றிக்கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.