மக்கள் மத்தியில் பிரபலமான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கவுள்ள நிலையில், தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக, சின்ன மருமகள் தொடர் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், வரும் திங்கள்கிழமை முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் - 2 தொடர், புதிய நேரத்தில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
அய்யனார் துணை தொடர் இரவு 8.15 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இந்தத் தொடர் புதிய நேரத்தில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
சிறகடிக்க ஆசை தொடர் வழக்கம்போல, இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்களின் புதிய நேர மாற்றம் வரும் அக். 6 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
பிக் பாஸ் 9வது சீசனின் தொடக்க நிகழ்ச்சி வரும் அக். 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ள நிலையில், அக். 6 ஆம் தேதி முதல் இரவு 9.30 மணிக்கு நாள்தோறும் ஒளிபரப்பாகவுள்ளது.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு பூங்காற்றுத் திரும்புமா தொடர், மாலை 6.30 மணிக்கு மகாநதி தொடர், இரவு 7 மணிக்கு சிந்து பைரவி கச்சேரி ஆரம்பம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.