நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ள “பைசன் காளமாடன்” திரைப்படத்தின் தென்னாடு பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம், பைசன் காளமாடன். இப்படத்துக்கு, நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
தென் மாவட்டங்களில் வாழும் கபடி வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் பா. இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘அப்லாஸ் என்டர்டெயின்மென்ட்’ ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
ஏற்கெனவே, வெளியான இப்படத்தின் ‘தீக்கொளுத்தி’, ‘சீனிக்கல்லு’ ஆகிய பாடல்களை இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். மேலும், ‘றெக்க றெக்க’ எனும் மற்றொரு பாடலை மாரி செல்வராஜ் மற்றும் பாடகர் அறிவு ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர்.
இந்தப் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதியுள்ள ‘தென்னாடு’ எனும் புதிய பாடலை படக்குழுவினர் இன்று (அக். 2) வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: புதிய ரேஸுக்கு தயாராகும் அஜித், நரேன் கார்த்திகேயன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.