மூக்குத்தி அம்மன் 2 போஸ்டர்.  படம்: இன்ஸ்டா / நயன்தாரா
செய்திகள்

மூக்குத்தி அம்மன் 2: முதல்பார்வை போஸ்டர்!

நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் போஸ்டர் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரை பகிர்ந்த நடிகை நயன்தாரா, ரசிகர்களுக்கு தனது ஆயுத பூஜை வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

முக்குத்தி அம்மன் முதல் பாகத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்திலும் ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.

இந்தப் படம் வெளியானபோது நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்க, இரண்டாம் பாகத்தினை சுந்தர் சி இயக்குகிறார்.

இப்பாகத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் உடன் விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் நடிகைகள் நயன்தாரா, துனியா விஜய், ரெஜினா கேசண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் பூஜை ரூ. 1 கோடி செலவில் நடைபெற்றதாகவும் படம் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படமாகவும் உருவாகவுள்ளதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார்.

The first look poster of actress Nayanthara's Mookuthi Amman 2 has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் - 9 தொடக்கம்: தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தசரா ஸ்பெஷல்.... நிகிதா சர்மா!

ஆலங்கிளியே... ஜெனிலியா!

தனிநபரைக் குறிவைக்கும் ஃபிஷிங் தாக்குதல்: எப்படித் தற்காத்துக்கொள்வது?

செளடேஸ்வரி அம்மன் கோயிலில் கத்தி போடும் திருவிழா: ஏராளமானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT