செய்திகள்

ஹரியாணாவை வீழ்த்தியது தமிழ் தலைவாஸ்

புரோ கபடி லீக் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 45-33 புள்ளிகள் கணக்கில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

தினமணி செய்திச் சேவை

புரோ கபடி லீக் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 45-33 புள்ளிகள் கணக்கில், நடப்பு சாம்பியன் ஹரியாணா ஸ்டீலா்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.

இரு அணிகளும் இதுவரை தலா 11 ஆட்டங்களில் விளையாடியிருக்க, தமிழ் தலைவாஸுக்கு இது 5-ஆவது வெற்றியாகும். ஹரியாணா 5-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், 24 ரெய்டு புள்ளிகள், 12 டேக்கிள் புள்ளிகள், 6 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளியை தனதாக்கியது. அதிகபட்சமாக ரெய்டரும், கேப்டனுமான அா்ஜுன் தேஷ்வால் 22 புள்ளிகள் வென்றெடுத்தாா்.

ஹரியாணா அணி 21 ரெய்டு புள்ளிகள், 7 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக்ஸ்ட்ரா புள்ளிகள் வென்றது. அதிகபட்சமாக ரெய்டா் விஷால் டேட் 10 புள்ளிகள் கைப்பற்றினாா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில், தபங் டெல்லி கே.சி. 43-26 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை தோற்கடித்தது. புள்ளிகள் பட்டியலில் தற்போது, டெல்லி 18 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஹரியாணா 6-ஆம் இடத்திலும் (12), தமிழ் தலைவாஸ் 8-ஆம் இடத்திலும் (10), யுபி 9-ஆம் இடத்திலும் (8) உள்ளன.

நாட்டு நலப்பணி திட்ட முகாம் நிறைவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

பல்கலை. கபடி: மேலவாசல் கல்லூரிக்குப் பாராட்டு

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

காயமடைந்தவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT