செய்திகள்

லோகா சாப்டர் 1! ஓடிடியில் எங்கே? எப்போது?

லோகா ஓடிடி வெளியீடு குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

லோகா திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் லோகா. சூப்பர் வுமன் கதையாக உருவான இதில் முன்னணி கதாபாத்திரத்தில் கல்யாணி நடித்திருந்தார்.

ஆக்சன் காட்சிகளும் சூப்பர்வுமனாக மாறிய கதையும் சுவாரஸ்யமாக இருந்ததால் இப்படம் இந்தியளவில் கவனம் பெற்று வசூலில் சக்கை போடு போட்டது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் டோமினிக் அருண் இயக்கத்தில் உருவான லோகா அடுத்தடுத்த பாகங்களையும் கொண்டிருக்கிறது. அதில், துல்கர், டொவினோ தாமஸ், மம்மூட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படம் வருகிற அக். 23 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் இப்படம் மேலும் கவனம் பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

reports suggests that lokah chapter - 1 will be out netflix on oct 23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT