டியூட் டிரைலர்!
டியூட் டிரைலர் வெளியானது...
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டியூட்”. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்துள்ளது.
இந்த நிலையில், டியூட் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. காதல் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் அக். 17 அன்று தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது.
summary