நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், பிரதீப் ரங்கநாதன், துருவ் விக்ரம் 
செய்திகள்

தீபாவளி வெளியீட்டில் இளம் நாயகர்கள்!

தீபாவளி வெளியீடாக இளம் கதாநாயகர்களின் படங்கள் வெளியாகிறது...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தாண்டு தீபாவளி வெளியீட்டில் இளம் கதாநாயகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன.

தீபாவளியின் இனிப்பு, பட்டாசு கொண்டாட்டங்கள் ஒருபுறம் என்றால் அந்த நாளில் வெளியாகும் திரைப்படங்களைக் குடும்பத்துடன் காணச் செல்வது மற்றொரு கொண்டாட்டம். பல ஆண்டுகளாக நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பிரபலங்களின் திரைப்படங்கள் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்துள்ளன.

ஆனால், இந்தாண்டு ஆச்சரியமாக எந்த பெரிய நாயகர்களின் திரைப்படமும் தீபாவளி வெளியீட்டில் இல்லை. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் கருப்பு அடுத்தாண்டு வெளியாகிறது. தனுஷின் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் மதராஸி ஆகிய படங்கள் முன்பே திரைக்கு வந்துவிட்டன.

இந்த நிலையில், வளர்ந்துவரும் நடிகர்களான ஹரிஷ் கல்யாணின் டீசல், பிரதீப் ரங்கநாதனின் டியூட், துருவ் விக்ரமின் பைசன் ஆகிய திரைப்படங்கள் தீபாவளி வெளியீடாக அக். 17 ஆம் தேதி வெளியாகின்றன.

இதில், டியூட் மற்றும் பைசன் படங்களின் மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. டீசல் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்துள்ளதால் அப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க: டியூட் டிரைலர்!

harish kalyan, pradeep ranganathan, dhruv vikram movies release on this diwali

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஜர்பைஜான் விமான விபத்து: ரஷிய பாதுகாப்பு அமைப்புதான் காரணம்! - அதிபர் புதின்!

புத்தம்புது வேளை... மிஷா நரங்!

மின்ஸ்க் மாநகரத்திலே... அனார்கலி மரிக்கார்!

ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்தது மோசமான முடிவா? முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா!

SCROLL FOR NEXT