பைசன் பட போஸ்டர்.  படம்: எக்ஸ் / மாரி செல்வராஜ்.
செய்திகள்

பைசன் டிரைலர் தேதி..! முதல் வெற்றி பெறுவாரா துருவ் விக்ரம்?

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி படத்தின் டிரைலர் வரும் அக்.13ஆம் தேதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்லாஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் நீலம் தயாரிப்பு இணைந்து பைசன் படம் உருவாகியுள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்கள்.

நிவாஸ் கே. பிரசன்னா இசையில் 5 பாடல்கள் வெளியாகி, மக்களிடையே கவனம் ஈர்த்து வருகின்றன.

இந்தப் படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.

தென் மாவட்டங்களில் வாழும் கபடி வீரர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில், நடிகர்கள் பசுபதி, அமீர், லால் , அழகம் பெருமாள், அனுராக் அரோரா மற்றும் நடிகை ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், படத்தின் டிரைலர் வரும் அக்.13ஆம் தேதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருவ் விக்ரம் இதுதான் தனது முதல் படம் என்று கூறியுள்ளார். இந்தப் படம் வெற்றிப் படமாக அமையும் என அவர் மிகுந்த நம்பிக்கையில் இருக்கிறார்.

The trailer date of the film 'Bison Kaalamadan', directed by Mari Selvaraj, has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக தொண்டர்கள் எங்கள் கட்சிக் கொடியவே தூக்க மாட்டாங்க... - செல்லூர் ராஜு

தேர்தல் நெருங்கும்போது மட்டும் மகளிர் உரிமைத் தொகை ஞாபகம் வருகிறதா?- நயினார் நாகேந்திரன் கேள்வி

டெம்பா பவுமா, கேசவ் மகாராஜ் அணியில் இல்லாதது பின்னடைவே, ஆனால்... மார்க்ரம் கூறுவதென்ன?

ஃபார்முக்கு திரும்பிய பிரேசில்..! அணியில் இடம்பெறாத நெய்மர் கூறியது என்ன?

ராம் அப்துல்லா ஆண்டனி டிரைலர்!

SCROLL FOR NEXT