நடிகை ரிமா கல்லிங்கலின் புதிய பட பாடல் புல்லுவன் பாட்டு வெளியாகியுள்ளது.
தியேட்டர் - தி மித் ஆஃப் ரியாலிட்டி என்ற படத்திலிருந்து உருவாகியுள்ள இந்தப் பாடல் கவனம் ஈர்த்து வருகிறது.
மலையாளத்தின் பிரபலமான நடிகையாக இருப்பவர் ரிமா கல்லிங்கல். தனியாக நடன பள்ளிகளையும் நடத்திவரும் இவர் தற்போது ’தியேட்டர் - தி மித் ஆஃப் ரியாலிட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
அஞ்சனா டாக்கீஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தினை சஜின் பாபு இயக்கியுள்ளார். இவர் பிரியாணி என்ற படத்தின் மூலம் விருதுகளை வென்று கவனம் பெற்றார்.
கேரள அரசின் இரண்டு விருதுகளைப் பெற்ற இந்தப் படம் அக்.16ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், புல்லுவன் பாட்டு எனும் பாடல் வெளியாகியுள்ளது. நாகம்பாடிகள் என அழைக்கப்படும் கேரள ஒடுக்கப்பட்ட மக்களின் கானா பாடல் என இது அழைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.