இட்லி கடை போஸ்டர்.  
செய்திகள்

இட்லி கடை ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

தனுஷின் இட்லி கடை ஓடிடியில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

தனுஷின் இட்லி கடை திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை கடந்த அக். 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல கருத்துகளும் கிடைத்தன. இதனால், இட்லி கடை படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

ஆனால், ரசிகர்களிடமிருந்து ஓரளவு வரவேற்பு கிடைத்தாலும் வணிக ரீதியாக இப்படம் சுமாரான வெற்றியைச் சந்தித்தது. காரணம், ரூ. 70 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் திரையரங்கு வெளியீட்டில் ரூ.65 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தெரிகிறது.

நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை!

ஓடிடி மற்றும் பிற உரிமைகள் நல்ல தொகைக்கு விற்கப்பட்டிருந்தால் மட்டுமே இட்லி கடை லாபகரமான படமாக இருந்திருக்கும். இந்த நிலையில், இட்லி கடை திரைப்படம் வருகிற அக். 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The release date of Dhanush's Idli Kadai on OTT has been officially announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள்களை நிறைவு செய்த ஆக்‌ஷன் சீரியல்!

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!

பாகிஸ்தானின் அபார பந்துவீச்சில் 110 ரன்களுக்கு சுருண்ட நியூசிலாந்து!

ஏமாற்றத்தைக் கொடுத்த ஜன நாயகன் வழக்கு தீர்ப்பு!

உ.பி.யில் தொடரும் அவலம்..! அம்பேத்கர் சிலை உடைப்பு!

SCROLL FOR NEXT