நாக துர்கா - பவிஷ்  படம் - எக்ஸ்
செய்திகள்

தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் புதிய படம்!

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று (அக். 27) தொடங்கியுள்ளது.

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தில் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பவிஷ் நாயகனாகவே நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. இயக்குநர் கஸ்தூரி ராஜா படப்பிடிப்பைத் தொடக்கி வைத்தார்.

நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்து பவர் பாண்டி, ராயன் படங்களைத் தொடர்ந்து இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் பவிஷ் நாயகனாக நடித்திருந்தார்.

ஒவ்வொரு படத்துக்கும் மாறுபட்ட கதைக்களத்தை இயக்கி வரும் தனுஷ், முற்றிலும் இளம் தலைமுறையைக் கவரும் வகையில் எடுத்த படமே நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், 2கே தலைமுறையினர் வெகுவாகக் கொண்டாடினர்.

இப்படத்தில் நடித்த பவிஷ், நடிகர் தனுஷின் அக்கா மகனாவார். அவருக்காகவே இப்படத்தை தனுஷ் இயக்கியதாகவும் கூறப்படுவதுண்டு. இந்நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தைத் தொடர்ந்து புதிய படத்தில் பவிஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

போகன் திரைப்பட இயக்குநர் லக்‌ஷ்மனிடம் உதவி இயக்குநராக இருந்த மகேஷ் ராஜேந்திரன் இப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இப்படத்தில் தெலுங்கு யூடியூப் பிரபலம் நாக துர்கா நாயகியாக நடிக்கவுள்ளார்.

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையிலான காதல் பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9: போட்டியாளராகும் மற்றொரு திருநங்கை?

Neek Hero Pavishs Next film as Hero begins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மங்கள விளக்கே வருக... ஸ்ரீமுகி!

அதிமுக பூத் கமிட்டி கிளை நிா்வாகிகள் பயிற்சிக் கூட்டம்

தங்க மீன்... சுபஸ்ரீ கங்குலி!

‘எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது!’ -வட கொரிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த புதின்!

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

SCROLL FOR NEXT