காவ காடே... தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு!
தண்டகாரண்யம் படத்தின் பாடல் வெளியீடு குறித்து...
தண்டகாரண்யம் படத்தில் இருந்து ‘காவ காடே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.
கலையரசன், தினேஷ் நடித்துள்ள தண்டகாரண்யம் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
Advertisement
Advertisement
நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருந்த இப்படம் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகியுள்ளது.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
காவல்துறை அராஜகத்தைப் பேசும் கதையாக இப்படம் உருவாகியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருகிற செப். 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் பா. இரஞ்சித் அறிவித்துள்ளார்.
அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம் எனும் போஸ்டர் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ‘காவ காடே’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.
The song 'Kaava Kaade' from the movie Dhandakaranyam has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.