கும்கி 2 போஸ்டர் 
செய்திகள்

கும்கி - 2 படத்தின் அறிவிப்பு வெளியானது!

கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கும்கி படத்தின் இரண்டாம் பாகத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான கும்கி திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

தம்பி ராமையாவின் நகைச்சுவை, டி. இமானின் இசையில் வெளியான பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், கும்கி - 2 திரைப்படத்தின் அறிவிப்பை மோஷன் போஸ்டருடன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் பாகத்தில் உயிரிழக்கும் கும்கி யானை, மீண்டும் பிறந்துவிட்டேன் என்ற வாசகத்துடன் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகத்தையும் பிரபுசாலமன் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் அறிமுக விடியோவை பகிர்ந்துள்ள நடிகர் சிம்பு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The announcement of the film Kumki - 2 has been released

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கம் என்ன?... ஸ்ருதி ஹாசன்!

வனத்துறை அலுவலகத்துக்கு ஒரு நீதி, மக்களுக்கு ஒரு நீதியா? மாநில மனித உரிமை ஆணையம்

நிலவைச் சிவப்பாக்கும் மும்பைக்காரி... ஷபானா!

சிரிப்பழகு... பிரியா பிரகாஷ் வாரியர்!

புதிய சாதனையை நோக்கி நகரும் லிட்டன் தாஸ்!

SCROLL FOR NEXT