இட்லி கடை இசைவெளியீட்டு விழாவில் குலதெய்வங்கள் குறித்து தனுஷ் பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்திற்குப் பின் இயக்கி நடித்த இட்லி கடை வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய தனுஷ், “இட்லி கடை திரைப்படத்தின் கதை என் பால்யத்தில் நடந்தவைதான். வறுமையில் வயலில் வேலைசெய்து இட்லி சாப்பிட்டவர்களுத்தான் அதன் அருமை தெரியும். நான் காசு கிடைக்காமல் இட்லிக்காக ஏங்கியிருக்கிறேன். நம் அப்பா, தாத்தன், பாட்டன், பூட்டன் வாழ்ந்த கதையெல்லாம் காற்றோடு காற்றாக போய்விடக்கூடாது.
பூர்விகம்தான் நம் அடையாளம். நீங்கள் குலதெய்வ வழிபாட்டை விடக்கூடாது. நம் பிள்ளைகளைக் குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்று நாமெல்லாம் எப்படி, எங்கிருந்து வந்தோம் என்பதை சொல்லிக்கொடுத்து குலதெய்வ அருளுடன் அவர்களை வளர்க்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: குழிதோண்டி புதைக்கற மாதிரி இருக்கு... பாடகர் சத்யன் வேண்டுகோள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.